பாணந்துறை கடலில் நீராடிக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் அலையில் அள்ளுண்டு செல்லப்பட் நிலையில் பாணந்துறை உயிர் காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்கள் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சாள்ஸ் அன்டனி, 16 வயதுடைய செல்வராஜா சந்தோஷ், 16 வயதுடைய வினோத், 16 வயதுடைய சந்துருக்சன் ருக்சிகா, 15 வயதுடைய மோகனதாஸ் தினுஷா , 16 வயதுடைய பரதன் தினுசிகா ஆகியோராவர்.

இவர்கள் சுற்றலாவாக பாணந்துறை கடற்கரைக்கு வந்திருந்த நிலையில் 50 மீற்றர் தூரத்தில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் தங்களது உயிரை காப்பாற்றுவதற்காக கடலில் இருந்து கூச்சலிட்ட போது அங்கிருந்த கடற்படையினர் மற்றும் உயிர் காப்புப் பிரிவினர் இவர்களை காப்பாற்றியுள்ளனர்.

Share.
Leave A Reply