தவறான உறவு முறை காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (05) மாலை சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தவறான உறவு முறை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன் கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் .

அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Share.
Leave A Reply