போயிங் 737 விமானம் பிரேசிலின் சால்வடார் விமான நிலையத்தில் இருந்தது சாவ் பாலோ விமான நிலையத்திற்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும் முன்பே பயணிகளிடையே மோதல் ஏற்பட்டது.
ஜன்னலோர இருக்கைகாக பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
10 பேர் குடும்பத்துடன் பயணித்த பயணி ஒருவர் ஊனமுற்ற குழந்தையின் தாயினால் தாக்கப்பட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் இரு பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை 10 மற்றும் 5 பேர் கொண்ட இரு குடும்பங்களுக்கு இடையே சண்டையாக மாறியது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், ஒருவரையொருவர் அவதூறான வார்த்தைகளை பேசி ஒருவரை ஒருவர் தாக்குவதைக் காணலாம்.இதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
Fofoca do voo da Gol que 2 mulheres começaram a bater boca e no fim das contas 15 pessoas foram expulsas do avião 🤭 pic.twitter.com/2zQiNipsqe
— vini le vini (@aqueleDrama) February 3, 2023
Massive brawl breaks out on airline flight to Brazil… over a window seat. pic.twitter.com/zTMZPYzzDy
— Mike Sington (@MikeSington) February 3, 2023