மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் விஸ்வஜித் என்ற 19 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் களுத்துறையிலிருந்து ஹீனடியாகல நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஹீனடியாகல பாலத்துக்கு அருகிலிருந்த மதிலில் மோதியுள்ளது.

இதனையடுத்து பலத்த காயமடைந்த இளைஞர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply