பாக்கிஸ்தான் தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்றுள்ளதாக இம்ரான் கானும் அவரது சகாக்களும் தெரிவித்துள்ளனர்.

பாக்கிஸ்தான் தேர்தலில் இராணுவத்தின் ஒடுக்குமுறைகள் தேர்தல் மோசடிகளை மீறி இம்ரான்கானின் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் நவாஸ்செரீவ் தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் அதனை மீறி பிடிஐ கட்சியுடன் இணைந்து போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்

சமூக ஊடகத்தின் ஊடாக வெளியிட்டுள்ள செய்தியொன்றில் இம்ரான்கான் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறைகளை மீறி அடைந்துள்ள வெற்றியை கொண்டாடுமாறு அவர் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

265 ஆசனங்களிற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இம்ரான் கானின் பிபிடி கட்சி 90 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பாக்கிஸ்தான் தேர்தல்களில் தலையிடும் ஆட்சியாளர்களை உருவாக்கும் வரலாற்றை கொண்ட பாக்கிஸ்தான் இராணுவத்தின் ஆதரவு முன்னாள் பிரதமர் நவாஸ்செரீவ் கட்சிக்குள்ளதாக கருத்து நிலவியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் வாக்காளர்கள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பிடிஐ கட்சிக்கும் இம்ரான்கானிற்கும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மக்கள் ஆதரவு காரணமாகவே செரீவ்விற்கு ஆதரவாக எதனையும் செய்ய முடியாமல் போனதாக பாக்கிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply