சேலம்: 2ஆவது திருமணம் செய்து கொண்ட அமெரிக்க மாப்பிள்ளை திருமணம் செய்த ஒரே ஆண்டில் தன்னை கைவிட்டதாக சேலத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி. இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் என்பவருக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் கொரோனா காலத்தில் நோய் பாதித்து கண்ணன் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி ஆர்த்திக்கு அமெரிக்க வாழ் இந்தியரான பாஸ்கர் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்தது.

இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் ஆர்த்தியின் முதல் கணவருக்கு பிறந்த இரு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக ஆர்த்தியுடன் அவ்வப்போது பாஸ்கர் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.

ஆனால் ஆர்த்தியோ எனக்கு இரு குழந்தைகள் இருப்பதை தெரிந்துதானே திருமணம் செய்தீர்கள் என வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் காரில் சென்ற போது இருவருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து கோபமடைந்த பாஸ்கர், ஆர்த்தியையும் அவரது இரு குழந்தைகளையும் காரிலிருந்து நடுரோட்டில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவர்களை பாஸ்கருக்கு சொந்தமான ஹோட்டலுக்கு வர சொன்னார்.

அங்கு பாஸ்கருக்கும் ஆர்த்தியின் உறவினர்கள் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பாஸ்கர் தனது வழக்கறிஞரை வரவைத்தார். அவர் நிலைமை மோசமடைவதை உணர்ந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.

அங்கு வந்த போலீஸார் பாஸ்கரனை பத்திரமாக மீட்டு தங்கள் வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது ஆத்திரமடைந்த ஆர்த்தி, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாஸ்கருக்கு என் வயதில் இரு மகள்கள் இருக்கிறார்கள். ஆனால் என்னிடம் 40 வயது என கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு தற்போது 57 வயதாகிறது. என் வாழ்க்கையையே நாசமாகிவிட்டான். என்னை சித்ரவதை செய்தான் என கூச்சல் போட்டு அங்கு வேடிக்கை பார்த்தவர்களிடம் நியாயம் கேட்டார்.

இந்த நிலையில் பெண் ஆய்வாளர், ஆர்த்தியை அப்புறப்படுத்தினார். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்ட போது இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.

பாஸ்கரின் இரண்டாவது மனைவி ஆர்த்தியின்உறவினர்கள் தன்னை தாக்க வந்திருப்பதாக புகார் கொடுத்ததை அடுத்து அவரை பாதுகாப்பாக அழைத்து செல்கிறோம் என தெரிவித்தனர்.

Share.
Leave A Reply