காசாவில் ஐ.நா அலுவலகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைத்துள்ளது என வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், ” ஐ.நா.வின் பள்ளிக்கூடம் அருகே அமைந்த இந்த சுரங்கத்திற்குள் பெரிய மின்கலன்களும் வைக்கப்பட்டு உள்ளன. மின்சாரத்திற்காக தனி அறை அமைத்து, அதன் வழியே தேவையான இடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுவதும் தெரிந்தது. பயங்கரவாதிகள் இந்த கட்டமைப்பை பயன்படுத்தி வந்துள்ளனர்.
சுரங்க வாசல் மற்றொரு புறத்தில், ஐ.நா.வின் வளாக பகுதிக்குள்ளேயே முடிகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஐ.நா. பணியாளர்கள் செயல்படுகின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது.