நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை ஓயாவிலிருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலமொன்று (12) மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீட்க்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு நுவரெலியா மாவட்ட நீதவான் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.