இஸ்ரேலிய படையினர் கான்யூனிசில் உள்ள நாசெர்மருத்துமவமனைக்குள் நுழைந்துள்ளனர்
இஸ்ரேலிய படையினர் கான்யூனிசில் உள்ள நாசெர்மருத்துமவமனைக்குள் நுழைந்துள்ளனர்.
நாசெர்மருத்துவமனைக்குள் துல்லியமட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.
தென்காசாவில் உள்ள நாசெர் மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளை தடுத்துவைத்திருந்தனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம்தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்குள் பயங்கரவாதிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் போல தோன்றுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ள இஸ்ரேலிய இராணுவம் கட்டிடத்தின் சில பகுதிகளை புல்டோசர்களை பயன்படுத்தி தரைமட்டமாக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தின் மத்தியில் நாசெர்மருத்துவமனை பணியாளர்கள் பணியாற்றுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.