இன்னும் சிலர் தனது துணையை வெறுப்பேற்றுவதற்காகவும் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். இந்த சேவையின் விதிமுறைகளில் முத்தம், கைப்பிடித்தல் போன்ற எந்தவித உடல் தொடர்புகளுக்கு அனுமதி இல்லை.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வாடகை வீடு, வாகனம் இல்லாதவர்கள் வாடகை வாகனங்கள் எடுப்பது போல சீனாவில் காதலர் இல்லாதவர்கள் பணம் செலுத்தி விட்டு தனக்கான ஒரு வாடகை காதலனை தேர்வு செய்து கொள்ளலாம்.

காதலர் இல்லாமல் தனித்து வாழும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே சீன ஆன்லைன் நிறுவனமான taobao.com “தனித்து வாழும் இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வாடகை காதலர்கள்” என்ற வினோத விளம்பரம் வெளியிட்டது.

புத்தாண்டு, காதலர் தினம் மற்றும் பண்டிகை காலங்களில் அங்குள்ள இளைஞர்களால் அதிகமாக ஊக்கமளிக்கப்படும் சேவைதான் இது.

பண்டிகை விடுமுறையில் வீட்டுக்கு வருகையில் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? யாரையாவது காதலிக்கிறாயா? என்று திருமணத்திற்காக பெற்றோரால் வற்புறுத்தப்படும் இளைஞர்கள் பெற்றோரின் அதிருப்தியை சமாளிக்க ஒரு வாடகை காதலனை தேர்வு செய்து அழைத்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் தனது துணையை வெறுப்பேற்றுவதற்காகவும் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள்.

இந்த சேவையின் விதிமுறைகளில் முத்தம், கைப்பிடித்தல் போன்ற எந்தவித உடல் தொடர்புகளுக்கு அனுமதி இல்லை.

அவரோடு ஊர் சுற்றலாம், ஷாப்பிங் செல்லலாம், வீட்டிற்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தலாம் வாடகை நேரம் முடிந்தவுடன் கழற்றிவிடலாம்.

இந்த சேவையில் ஒரு ஆண் அல்லது பெண்ணை வாடகைக்கு எடுப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு 600RMB நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பிற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகம். மேலும், இது ஒரு சராசரி சீன குடும்பத்தின் மாத வருமானத்தை விட அதிகம்.

– சு. சாஜிதா பாத்திமா

 

Share.
Leave A Reply