இளைஞன் ஒருவரின் பழைய காதலியுடன் மற்றுமொரு நபர், காதல் தொடர்பை கொண்டிருந்ததால் ஆத்திரமுற்ற பழைய காதலன், அந்த நபரை (புதிய காதலனை) கத்தியால் கழுத்தில் குத்திய சம்பவம் கஹதுடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. கத்தியால் குத்திய பழைய காதலன், அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்துக்கு இலக்காகி கடும் காயமடைந்த இளைஞன், வேதர மாவட்ட வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ள இந்த சந்தேகநபருடன் யுவதி காதல் தொடர்பை கொண்டிருந்தார். அந்த தொடர்பை சில மாதங்களுக்கு முன்னர் நிறுதிக்கொண்டார். அதன் பின்னரே, தற்போது கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனுடன் காதலை துளிர்விட்டுள்ளாள் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply