வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பூனை, அயல் வீட்டாரின் லொறியில் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதுருகிரிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு நேற்று (22) இரவு 8 மணியளவில் லொறி ஒன்றில் ஆயுதங்களுடன் சென்ற சிலர் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ள நிலையில் வீட்டில் இருந்த நபரொருவரையும் காயப்படுத்தியுள்ளனர..
தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருந்த பெண் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில் ,
எங்கள் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட பூனையை அயல் வீட்டில் இருந்த குழந்தை அவரது வீட்டிற்கு எடுத்துச்சென்ற போது, பூனை அந்த வீட்டு உரிமையாளர்களின் லொறியில் மோதி உயிரிழந்துள்ளது.
இது தொடர்பில் நாங்கள் அயல் வீட்டாரிடம் விசாரித்த பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்தார்.
இது தொடர்பில் இரு தரப்பினரும் அதுருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.