ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சேநவால்னியின் உடலை தான் பார்வையிட்டுள்ளமதாக தெரிவித்துள்ள அவரது தாயார் தனது மகனின் உடலை இரகசியமாக புதைப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என ரஸ்ய அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மகனின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேதஅறைக்கு என்னை கொண்டு சென்றனர் நான் ஆவணங்களில் கைச்சாத்திட்டேன் என லியுட்மிலா நவல்ன்யா தெரிவித்துள்ளார்.
சட்டத்தின்படி அதிகாரிகள் எனது மகனின் உடலை கையளிக்கவேண்டும் ஆனால் தற்போது என்னை மிரட்டுகின்றனர் உடலை வழங்கமறுக்கின்றனர் என நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார்.
எனது மகனின் உடலை புதைப்பதற்கு அதிகாரிகள் நிபந்தனை விதிக்கின்றனர் உடலை புதைக்கும் நேரம் உட்பட தாங்கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர் என நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார்.
மயானத்தின் தொலைதூர பகுதியில் உள்ள புதிய புதைகுழிக்கு என்னை கொண்டு சென்று இதுதான் எனது மகனின் புதைகுழி என காண்பிப்பதற்கு அவர்கள் முயல்கின்றனர் அதிகாரிகள் என்னை அச்சுறுத்துகின்றனர் எனவும் நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இரகசியமாக உடலை புதைப்பதற்கு இணங்காவிட்டால் உடலிற்கு ஏதாவது செய்துவிடுவோம் என கண்ணை நேரடியாக பார்த்து அவர்கள் தெரிவித்தனர் உங்களிற்கு போதிய நேரம் இல்லை உடல் பழுதடைகின்றது என அவர்கள் தெரிவித்தனர் எனவும் நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார்.