ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிவல்கெல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (22) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிரிவல்கெல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது கணவருடன் தென்னை ஓலையினால் வேயப்பட்ட சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் குறித்த வீடு நேற்று தீப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீபற்றிய போது இவரது கணவர் உடனடியாக வெளியேறி உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply