முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (26) திங்கட்கிழமை கஹவென்னகம, அம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மிஹிரிபென்ன பிரதேசத்தை சேர்ந்த 21 வயது இளைஞராவார். இவர் கை, கால்களால் மற்றும் கம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கஹவென்னகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயது இளைஞராவார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.