முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ள சாந்தனின் உடலை கொழும்பில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்படும் என சாந்தனின் குடும்பத்தார் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாந்தனின் உடலை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சாந்தனின் மைத்துனர் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்து உடலை பொறுப்பேற்றனர்.

சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்படும்.

Share.
Leave A Reply