தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியின் பெல்வெஹர பகுதியில் இன்று (04) காலை பஸ் ஒன்றும் காரும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில், காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் தாய், தந்தை மற்றும் ஆண் குழந்தையும் பஸ்ஸில் பயணித்த ஒருவரும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், தம்புள்ளையில் இருந்து சீகிரியா நோக்கி வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற காருமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பஸ் அதிவேகமாக சென்றதாகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த கார் மீது மோதியதாகவும் விபத்தை கண்டவர்கள் தெரிவித்தனர்.