15 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி உறவினர் வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மீகஹகிவுல , களுகஹகந்துர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞராவார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபரான இளைஞரை பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.