இணையத்தில் தற்போது வைரலாகிவரும் 24 வயது அகோரி சாமியார் தான் இலங்கையில் அமைச்சராக பணியாற்றியதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் .
நாளாந்தம் இணையத்தில் போலி சாமியார்கள் தங்களை பிரபலமாக்கிக்கொள்ள வாயில் வருவதையில்லாம் பேசி அவர்களாகவே சிக்கிக்கொள்கின்றார்கள். அந்த வகையில் தன்னை அகோரி சாமியார் என சொல்லிக்கொண்டு கலையரசன் எனப்படும் நபர் வெளியிட்டு வரும் தகவல்கள் ‘பகீர் ‘ ரகமாக இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு டிக் டொக் கில் பிரபலமானவர் கலையரசன் . அவருடைய மனைவியும் டிக் டொக் பிரபலம் தான் . கலையரசன் தற்போது அகோரியாக மாறியிருக்கும் நிலையில் சமீபத்தில் பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்.
அவ்வாறு வழங்கியுள்ள பேட்டியில்
தனக்கு காளி தேவி காட்சி கொடுத்ததாகவும் சிவனோடும் உமையோடும் தான் சகஜமாக அமர்ந்து உரையாடுவதாகவும் சொல்கிறார். தான் 40 இற்கு மேற்பட்ட டாக்டர் பட்டங்கள் பெற்றிருப்பதாகவும் ஆடம்பர கார்கள் பங்களாக்கள் என சுகபோகமாக வாழ்ந்த தான் எல்லாவற்றையும் விட்டு அகோரியானதாகவும். தனக்கு மரணத்தை கணிக்கும் ஆற்றல் இருப்பதாகவும் கூறுகிறார்.
இவர் அவிழ்த்துவிடும் நம்பமுடியாத தகவல்களுக்காவே இவரது பேட்டிகள் டிரெண்டாகி வரும் நிலையில் இவர் கூறியுள்ள மற்றுமொரு தகவல் உச்சகட்ட நகைப்பாகவுள்ளது.
அண்மையில் அவர் தனது பேட்டியில் பல மொழிகள் தெரியும் என்றும் குறிப்பாக சிங்கள மொழி நன்றாக தெரியும் என்றும் தான் இலங்கையில் அமைச்சராக பணியாற்றியதாகவும் கூறியுள்ளார். தான் அமைச்சராக இருக்கும் போது தினமும் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு பிரதம அதிதியாக சென்றதாகவும் இலங்கையில் தான் பெரும் பிரபலமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் சாதாரண கிராமத்தில் பிறந்து மிகவும் கஷ்டப்பட்டு டிஃடொக்கில் பிரபலமானதாக சொல்லிக் கொண்டிருந்த கலையரசன் இப்படியெல்லாம் நம்ப முடியாத தகவல்களை சொல்வது வெறும் பப்ளிசிட்டிக்கா அல்லது அவருக்கு கலையரசனுக்கு ‘என்னதான் ஆச்சு’ என்றும் நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.