ஓடிக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸின் சாரதி திடீரென சுகயீனமடைந்ததால் பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல் மதவாச்சியிலுள்ள வீடு ஒன்றுடன் கூடிய கராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் சிறு காயங்களுக்குள்ளாகி மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த 7 பேர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த தனியார் பஸ் வவுனியாவில் உள்ள ஆடை விற்பனை நிலையத்துக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்றதாகவும், விபத்து இடம்பெற்றபோது சுமார் 40 பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply