சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ள பாலியல் கல்வி தொடர்பில் நேற்று (6) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நோட்டன் பிரிட்ஜ் பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 37 வயது ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 3 அம் திகதி 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்க நுவரெலியா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் , 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 32 வயது இளைஞர் ஒருவர் பதுளை , களுகஹகந்துர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.