தான் கூறியதை விட அதிக விலை கொடுத்து லிப்ஸ்டிக் வாங்கி வந்ததால், கணவரிடமிருந்து மனைவி விவாகரத்து கோரியுள்ள சம்பவமொன்று உத்திரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த குறித்த பெண், தனது கணவரிடம் 10 ரூபாய் லிப்ஸ்டிக்கினை வாங்கி வர சொல்லி இருக்கிறார்.
ஆனால், அவருக்கு 10 ரூபாய் லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை. இதனால், 10 ரூபாய்க்கு பதிலாக 30 ரூபாய் லிப்ஸ்டிக்கினை வாங்கி வந்துள்ளார்.
இதனைக் கண்ட மனைவி, கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார்.
இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த ஆலோசகர் சதீஷ் கீர்வார் இது குறித்து விசாரணை நடத்தவே, ‘என் கணவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை. குழந்தைகளுக்காக சேமிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை” என்று அப்பெண் கூறியுள்ளார்.
இதன்மூலம், உண்மையில் அவர்களின் பிரச்சினை லிப்ஸ்டிக் இல்லை, அதிகமாக செலவு செய்வதுதான் என்பது புரிய வந்தது.
இந்நிலையில், இருவரிடமுடம் நிலைமையை கூறிய ஆலோசகர், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.