தமிழில் பழனி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடைசியாக தமிழில் கருங்காப்பியம் என்ற படத்தில் நடித்தார்.
இந்தநிலையில், காஜல் அகர்வால், ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதன்போது, காஜலை சுற்றி ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த நிலையில் கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர், அவரது இடையில் ரசிகர் கையை வைத்தார்.
இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த காஜல் அகர்வால், அந்த ரசிகரை பார்த்து என்ன இதெல்லாம் என்று கையை அசைத்தபடி கேள்வி கேட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fan/random Guy Misbehaving with actress #KajalAggarwal in a event🙄🙄 pic.twitter.com/I68WdTbxLl
— Movies & Entertainment (@Movies_Ent_) March 6, 2024