காசாவில் பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.
காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்ல முடியாமல் உள்ளதை மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவு என ஜோசப்பொரொல் வர்ணித்துள்ளார்.
போதிய தரைப்பாதைகள் இல்லாததே காசாவில் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கான காரணம் என ஐநாவில் உரையாற்றுகையி;ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தற்போது தங்களது உயிர்வாழ்தலிற்காக போராடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்லவேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது இது மனிதனால் உருவான நிலைமை கடல் மற்றும் வான்வெளி மூலம் விநியோகங்களை மேற்கொள்வதற்கான மாற்றுவழிகளை ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீதிவழியாக மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் செயற்கையாக முடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்டினி என்பது போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது உக்ரைனில் இது இடம்பெறும்போது கண்டிக்கும் நாங்கள் காசாவிலும் அதேவார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.