கவிஞர் வைரமுத்து குறித்து மீடு புகார் அளித்த பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் டப்பிங் யூனியனில் தலைவராக இருக்கும் ராதா ரவி பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி தன் மீது கூறி வரும் குற்றச்சாட்டுக்ளுக்கு பதில் அளிக்கும் வகையில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடகியாவும், டப்பிங் கலைஞராகவும் பிரபலமானவர் தான் சின்மயி. தனது குரலில் பல ஹிட் பாடல்களை கொடுத்த இவர், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
சின்மயி கொடுத்த இந்த புகார் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்படுவதாக தலைவர் ராதா ரவி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளிட்டிருந்தார்.
இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக சின்மயி தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் டப்பிங் பேச முடியாமல் இருந்து வரும் நிலையில், ராதா ரவி தன்னை வேண்டுமென்றே டப்பிங் யூனியனில் இருந்து நீக்கியுள்ளதாக கூறியிருந்தார்.
மேலும் டப்பிங் கலைஞர்களக இருக்கும் நடிகர் விஜய் ஸ்ருதிஹாசன் ஆகியோர் சந்தா கட்டாத நிலையிலும் யூனியனில் இருந்து வருகின்றனர். ஆனால் சின்மயி மட்டும் நீக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள நடிகர் ராதா ரவி, டப்பிங் யூனியனில் மஞ்சள் நிற அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டு தோறும் சந்தா கட்டி தங்களது அட்டையை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
சின்மயி தனது சந்தாவை புதுப்பிக்க தவறியதால், அவர் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் மஞ்சள் நிற அட்டை வைத்துக்கொண்டு தன்னிடம் வெள்ளை நிற அட்டை இருப்பதாக பொய் கூறியுள்ளார்.
அதேபோல் விஜய் ஸ்ருதிஹாசன் ஆகியோர் சந்தா கட்டாமலும் டப்பிங் யூனியனில் நீடித்து வரும் நிலையில், ஹரால்டு ராமசாமி என்பவர் மாதம் தோறும் ரூபாய் 15 ஆயிரம் கொடுத்து டப்பிங் யூனியனில் சந்தா கட்டாதவர்களுக்கு இந்த பணத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கொடுப்பார்.
அந்த பணத்தில் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரின் சந்தாக்களை எடுத்துக்கொள்வோம் என்று நடிகர் ராதா ரவி விளக்கம் அளித்துள்ளார்.
ஷாஜி என்பவர் டப்பிங் ஸ்டூடியோவிலேயே தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவர் புகார் தெரிவித்தும் டப்பிங் யூனியன் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தான் கோர்ட்டுக்கு செல்லப்போவதாக கூறியதை தொடர்ந்து தன்னிடம் இது குறித்து விசாரணை நடத்தியதாகவும், புகார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நடைபெறும் டப்பிங் யூனியன் தேர்தலில் இந்த புகார்கள் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.