தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நபராக இருப்பர் விஜே அர்ச்சனா (VJ Archana). நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி 220டி (Mercedes-Benz GLC 220d) ஆகும்.
குடும்பத்துடன் ஷோரூமிற்கு சென்று, இந்த விலை உயர்ந்த காரை விஜே அர்ச்சனா டெலிவரி எடுத்துள்ளார். இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் நிச்சயம் இருக்கும்
இதற்கு விஜே அர்ச்சனாவும் விதிவிலக்கு அல்ல. மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க வேண்டும் என்பது 25 வருட கனவு என விஜே அர்ச்சனா இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
எனவே கனவு நிறைவேறிய சந்தோஷத்தில், விஜே அர்ச்சனா ஆனந்த கண்ணீர் வடிப்பதை இந்த வைரல் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி விஜே அர்ச்சனா வாங்கியிருப்பது, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி 220டி கார் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி 220டி காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 75.20 லட்ச ரூபாயாக உள்ளது. ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 1 கோடி ரூபாய் வரும்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி 220டி காரில் பொருத்தப்பட்டிருப்பது, 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் (Diesel) இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 3,600 ஆர்பிஎம்மில் 195 பிஹெச்பி பவரையும், 2,000-3,200 ஆர்பிஎம்மில் 440 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.
இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். 5 பேர் சொகுசாக பயணம் செய்ய முடியும். 620 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருப்பதால், லக்கேஜ்களையும் தாராளமாக கொண்டு செல்லலாம்
அதே நேரத்தில் இந்த காரின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 66 லிட்டராக இருக்கிறது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) மற்றும் ஆடி க்யூ5 (Audi Q5) உள்ளிட்ட சொகுசு கார்களுடன், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி 220டி போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்க கூடியவர்களுக்கு, விஜே அர்ச்சனாவின் கதை உண்மையிலேயே உத்வேகம் தரக்கூடியதாக உள்ளது.
சாமர்த்தியாகவும், கடினமாகவும் உழைத்தால் எதுவும் சாத்தியமே என்பதை விஜே அர்ச்சனா உணர்த்தியுள்ளார்.