மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தையை வனவிலங்கு துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி தனது கைகளைகளில் பாதுகாப்பு கவசம் ஏதும் அணியாமல் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயற்சிக்கும் போது சிறுத்தைஅவரை தாக்கிய நிலையில், உள்ளூர்வாசிகள் மற்றும் பிற வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தையை கட்டையால் தாக்கி பிடித்துள்ளளர்.

சிறுத்தை மீட்பு பணியின் போது, இரண்டு பெண்கள் மற்றும் மூன்று வனவிலங்கு அதிகாரிகள் உட்பட ஐந்து நபர்களை தாக்கி காயப்படுத்தியதாகவும். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரயொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான காணொளி சமூவலைத்தலங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply