பாட்னா : பீகார் மாநிலத்தில் கடைசி நேரத்தில் கல்யாணமே வேண்டாம் என மணமகன் சாலையில் தலை தெறிக்க ஓட அய்யய்யோ நில்லுங்கள் என மணப்பெண் அவரை துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் திருமண சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பத்திரிகை முதல் பந்தி முதல் திருமண நிகழ்வுகளில் மக்களை சிரிக்க வைக்கும் பல வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் முன்னுக்கு வருகின்றன.
பொதுவாக 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணமே நடக்காது என்ற ஒரு வதந்தி பரப்பப்பட்டு வரும் நிலையில் 2k கிட்ஸ் எனப்படும் 18 வயது இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அது என்னமோ தெரியவில்லை அவர்கள் தான் ட்ரெண்டும் ஆகின்றனர்
பீகார் வீடியோ
அப்படி நடக்கும் திருமண நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும், சில நேரங்களில் சிரிப்பையும், சோகத்தையும், சஸ்பென்ஸ் என கலந்து கட்டி உருவாக்குவது வழக்கம் தான்.
அது போன்ற ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலம் நாவடாவில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் நாவடா பகுதியில் பகத்சிங் சவுத் பகுதியில் இளைஞர் ஒருவரை கூட்டமாக ஒரு கும்பல் துரத்திச் செல்லும் வீடியோ காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருமண நிகழ்ச்சி
குறிப்பாக மணக்கோலத்தில் இருக்கும் ஒரு பெண்ணும் அந்த இளைஞரை சிலர் வேகமாக துரத்திச் சென்றனர்.
எதற்காக என தேடிய போது தான் ஒரு சுவாரசிய சம்பவம் தெரியவந்தது. வேறு ஒன்றும் இல்லை ஓடியது மணமகனும், துரத்தியது மணமகள் என்பது தான் அது.
திருமணம் நிச்சயிக்கப்பட்டு எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில் மண்டபத்தில் மணமகனின் உறவினர்களும் மணமகளின் உறவினர்களும் குவியத் தொடங்கினர். தாலி கட்டியவுடன் பந்தி பரிமாற தயாராக இருந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது.
ஓடிய மணமகன்
தாலி கட்டுவதற்கு சற்று முன் வரை அமைதியாக இருந்த மணமகன் திடீரென தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என மண்டபத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து மணமகன் உறவினர்களும் மணமகள் உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்தப் பெண் பிடிவாதமாக இருந்தார்
துரத்திய மணமகள்
இதற்கிடையே அந்த மணமகன் திடீரென திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறி சாலையில் ஓடத் தொடங்கினார்.
இருந்தும் விடாத மணமகளும் அவரது உறவினர்களும் மணமகனை துரத்திச் சென்றனர். தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பார்ப்பதற்கு ஒருபுறம் கேலியாக இருந்தாலும் மறுபுறம் அந்த பெண்ணின் மனநிலையையும் யோசித்துப் பார்க்க வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.