கண்டி – பன்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி நேற்று(04) மாலை 6 மணியளவில், பன்வில அரத்தன பகுதியிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 3 பெண் ஊழியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் காயமடைந்த நிலையில் மடுகல்கெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய சாரதி தெல்தெனிய ஆதார வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.
சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.