தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலினை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்தனர்.

இந்தியாவின் மகாராஸ்ட்ரா மாநிலம், தானே பகுதியில் செயற்பட்டுவரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த மகராஸ்ட்ரா மாநிலத்தின் 12 நீச்சல் வீராங்கனைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுமதி கோரியிருந்தனர்.

இந்தியா / இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் தலைமன்னாரை வந்தடைந்தனர்.

தலைமன்னாரிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தத் தொடங்கி 12 பேரும் மாலை 4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை சென்றடைந்தனர்.

கடலில் நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் பொலிஸார், சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்.

Share.
Leave A Reply