பெங்களூர்: கன்னட நடிகர் தர்ஷன் தனது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவை திட்டி ஆபாசமாக மெசேஜ் செய்த ரசிகரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இறந்த ரசிகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

கன்னட சினிமாவில் முன்னி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தர்ஷன். இவரும் நடிகை பவித்ரா கவுடாவும் நண்பர்கள். இந்நிலையில் தான் பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் சித்ரதுர்காவை சேர்ந்த 33 வயது நிரம்பிய ரேணுகாசாமி என்பவர் ஆபாசமாகவும், திட்டியும் மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷனிடம் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் தான் திடீரென்று ரேணுகாசாமி சித்ரதுர்காவில் உள்ள வீட்டில் இருந்து மாயமான நிலையில் அவர் பெங்களூரில் உள்ள கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.

பெங்களூர் கால்வாயில் கிடந்த அவரது உடைலை நாய்கள் கவ்வி இழுப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சென்று ரேணுகாசாமியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலம் ரேணுகாசாமியின் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

மேலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையின்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது ரேணுகாசாமி கொலையில் நடிகர் தர்ஷனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் அவர் 3 பேருக்கு தலா 5 லட்சம் வழங்கி அவரை கடத்தி கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்படி ஒரு கும்பல் ரேணுகாசாமியை கடத்தி பெங்களூர் அழைத்து வந்து கார் ஷெட்டில் அடைத்து சித்ரவதை செய்து கொன்று உடலை கால்வாயில் வீசியது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 13 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் நடிகர் தர்ஷன் தனது மனைவியை பிரிந்துள்ளார்.

இந்த பிரிவுக்கு நடிகை பவித்ரா கவுடா தான் காரணம் என ரேணுகாசாமி நினைத்ததும், இதனால் நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகாசாமி, பவித்ரா கவுடாவை திட்டி ஆபாசமாக இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்தது.

இதுபற்றி பவித்ரா கவுடா கூறிய நிலையில் தர்ஷன் பணம் கொடுத்து அவரை கடத்தி சித்ரவதை செய்து கொன்றது அம்பலமாகி உள்ளது.

இந்நிலையில் தான் இறந்த ரேணுகாசாமியின் எப்படி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ரேணுகாசாமின் பிரேத பரிசோதனை அறிக்கை விபரம் வெளியாகி உள்ளது.. அதில் ரேணுகா சாமியின் தலை, வயிறு, மார்பு உள்பட பிற உடல் உறுப்புகளில் காயங்கள் உள்ளன.

ரத்தம் வடிய வடிய அவர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவரது தலையை வாகனத்தின் மீது இடித்துள்ளதற்கான அடையாளங்கள் உள்ளன.

மொத்தம் 15 இடங்களில் காயங்கள் உள்ளன. பெல்ட் உள்ளிட்டவற்றால் தாக்கியதற்கான அடையாளம் இருக்கின்றன என்பன போன்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளன

 

Share.
Leave A Reply