“தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் துணை இயக்குநராகப் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி பயிற்சி பெற்று வரும் உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.

அப்போது ஐஏஎஸ் உமா ஹார்த்திக்கு அவரது தந்தை வெங்கடேஸ்வரலு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.”,

Share.
Leave A Reply