எதிர்வரும் 21ம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் ஜூன் 19ம் திகதி யோகா தின நிகழ்ச்சிகள் பல பொது இடங்களில் மேற்கொள்ளஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த, 127 வயதான யோகா குரு பத்ம ஸ்ரீ சுவாமி சிவானந்தா தாத்தா யோகா செய்து அசத்தினார்.

பத்மஸ்ரீ சுவாமி சிவானந்தா 127 வயதிலும். தினந்தோறும் யோகா செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இந்த வயதிலும் தனக்கான வேலைகளை தாமே செய்து கொள்கிறார். எண்ணெய் தவிர்த்த உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார். இது போன்று கட்டுக்கோப்புடன் வாழ்வதே அவரின் ஆயுள் நீட்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Share.
Leave A Reply