“வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் மிகப்பெரிய வகையில் வன்முறையாக வெடித்தது.
இந்த போராட்டம் ஜூலை மத்தியில் தொடங்கிய பின்னர் அமைதி நிலை திரும்பியது.பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டமும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அரசு சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன் ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இதனால் ஷேக் ஹசீனா தனது பதிவியை ராஜினாமா செய்தார். ராணுவம் இடைக்கால அரசை அமைப்பதாக தெரிவித்தது.
ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார். அதன்பின்பும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை.
ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துக்கள் தீ வைத்து நாசமாக்கப்பட்டன.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஹோட்டலுக்கு தீ வைத்ததில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தபின், வங்காளதேசத்தில் நேற்று மாலை வரை குறைந்தது 232 பேர் உயிரழந்தனர்.
வங்காளதேசத்தில் நடைபெற்ற போராட்டம் காரணமாக மொத்த உயிரிழப்பு 560-ஐ தாண்டியுள்ளது.
ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் 328 பேர் உயிரிழந்திருந்தனர். ஜூலை 16-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 328 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக 23 நாள் போராட்ட வன்முறையில் 560 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை (நேற்று) மட்டும் 21-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.காசிப்பூரில் உளள் காஷிம்புர் உயர்பாதுகாப்பு சிறையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்த ஜெயில் வார்டன்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.”,