“அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் சூறாவளியால் சேதமடைந்து, கடந்த 4 ஆண்டுகளாக பயனற்றுக் கிடந்த 22 மாடி கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

சில நொடிகளில் கட்டிடம் இடிந்து விழும் காட்சி வைரலாகி வருகிறது.கட்டிடம் இடிந்து விழுந்ததால், அப்பகுதி முழுவதும் தூசி நிறைந்து காணப்பட்டது.

மேலும், சுமார் ஐந்து மாடி உயரத்திற்கு இடிந்த குவியல்கள் இருந்தது.இதற்கு முன்பு கேபிடல் ஒன் டவர் என்று அழைக்கப்பட்ட கட்டிடம், லாரா மற்றும் டெல்டா சூறாவளிகளில் மோசமாக சேதமடைந்தது.கட்டிடத்தின் உரிமையாளர்கள், அதை சரிசெய்ய பல முயற்சிகளை மேற்கொண்டு, இறுதியில் அதை இடிக்க முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply