தன் மீதான கொலை முயற்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரின் பேச்சுக்களே காரணம் என குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியும், தற்போதைய துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ட்ரம்ப்பை குறிவைத்து இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், நாட்டை காக்க போகும் தன் மீது இவர்களது பேச்சு தன்னை சுடுவதற்கு காரணமாக அமைந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் உள்ளேயும் வெளியேயும் நாட்டை அழித்து வருவதாகவும் விமர்சித்தார்.

Share.
Leave A Reply