பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது காதலியுடன் ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டில் குடியேற முடிவு செய்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது மனைவி சுஷானேயை 2014ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் முறைப்படி பிரிந்துவிட்டனர். இந்தத் தம்பதியருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களை இரண்டு பேரும் சேர்ந்தே கவனித்துக்கொள்கின்றனர்.

ஹ்ரித்திக் ரோஷன் சமீப காலமாக ஷபா ஆசாத் என்ற நடிகையைக் காதலித்து வருகிறார். ஷபா ஆசாத் பாடகியாகவும் இருக்கிறார். இருவரும் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளுக்குச் சேர்ந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

கோவாவில் ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுஷானே புதிய ஹோட்டல் திறந்த போது அதில் கூட ஹ்ரித்திக் ரோஷன் தனது புதுக்காதலியோடு சேர்ந்தே கலந்து கொண்டார். அதோடு ஹ்ரித்திக் ரோஷன் குடும்ப நிகழ்ச்சிகள், விருந்துகளிலும் ஷபா ஆசாத் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஹ்ரித்திக் ரோஷன் தனது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடிவு செய்துள்ளார்.

முன்னாள் மனைவியுடன் ஹ்ரித்திக் ரோஷன்

லிவ்இன் ரிலேசன்ஷிப் முறையில் சிறிது காலம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ இருவரும் முடிவு செய்துள்ளனர்.

ஹ்ரித்திக் ரோஷன் ஏற்கெனவே மும்பை வெர்சோவா கடற்கரையையொட்டி ஆடம்பர சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் மூன்று மாடிகளை மொத்தமாக ரூ.97.50 கோடிக்கு வாங்கியிருக்கிறார். தற்போது இந்த வீட்டிற்குத் தனது காதலியுடன் ஹ்ரித்திக் ரோஷன் குடியேற முடிவு செய்திருக்கிறார்.

இதற்காகத் தேவையான வேலைகள் தற்போது அந்த வீட்டில் நடந்து வருகின்றன. மூன்று மாடி வீட்டை இரண்டு மாடியாக மாற்றி அமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு மாடிகளை மட்டும்தான் வாங்கினார். அதன் பிறகு மேலும் ஒரு மாடியைச் சேர்த்து வாங்கி இருக்கிறார்.

கங்கனா ரணாவத்

ஹ்ரித்திக் ரோஷன் ஏற்கெனவே கங்கனா ரணாவத்தைக் காதலித்தார். பின்னர் இருவரும் பல சர்ச்சைகளுக்குப் பிறகு பிரிந்துவிட்டனர். அந்தச் சமயம் அவர்கள் இருவருக்குமான சண்டை இணையத்தில் பயங்கரமாக வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply