விசே என்ட்ரி. அதற்கு முன் பார்வையாளருடன் உரையாடல் ‘முத்துவிற்கு worst performer கொடுத்தது சரியில்லை’ என்று ஒருவர் கடுமையான ஆட்சேபத்தை வைக்க “ஓகே.. விசாரிக்கறேன்.

இந்த எபிசோடை சலிப்பு ஏற்படாத வகையில் விஜய்சேதுபதி கையாண்டது பாராட்டத்தக்கது. ‘ஆமாம்தானே?’ என்று சொல்கிற பழக்கம், ‘அப்படித்தானே?’ என்பதாக மாறியிருக்கிறது.

என்னவொன்று, போட்டியாளர்களிடமிருந்து நேரடியாகவும் சுருக்கமாகவும் பதில் வரவில்லையென்றால் விசே டென்ஷன் ஆகி விடுகிறார். ‘கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க நொண்ணைகளா?’ என்பது போல் எரிச்சலைக் காட்டிவிடுகிறார்.

மெஷின் கட்டிங் தயாரிப்புபோல எல்லோரும் ஒரே பாணியில் பதில் சொல்ல முடியாது. குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர் போல போட்டியாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது.

அதே சமயத்தில் போட்டியாளர்கள் சொதப்புவதையும் சொல்லியாக வேண்டும். கள்ள மௌனம், பாசாங்கு, அச்சம், தயக்கம் போன்றவற்றால் சரியாக பதில் அளிப்பதில்லை.

அடுத்த வார நாமினேஷனில் தன்னைக் குத்தி விடுவார்கள் என்கிற பயமாக இருக்கலாம். இந்த மௌனம் விஜய்சேதுபதியை எரிச்சல்படுத்துகிறது. “நான் அவங்களை நோண்டறதா சொல்றாங்க.. என்னைத்தான் அவங்க நோண்டறாங்க.. பார்த்தீங்கள்ல.. மக்களே.. நான் பாவம்ல” என்று பார்வையாளர்களிடம் நொந்து போய் புலம்ப வேண்டிய நிலைமை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 34

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 09-11-2024 Vijay Tv Show – Day 34

 

BB Tamil 8 Day 33: `என்னைப் பத்தி பேசினா கொலை விழும்’ – டெரர் மோடில் ரியா; அசத்திய அருண், சவுந்தர்யா- VIDEO

Share.
Leave A Reply