“கர்நாடக மாநிலத்தில் சாலையை இருபக்கமும் கவனிக்காமல் கடந்த சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் மங்களூரு எல்லைக்குட்பட்ட மஞ்சேஷ்வர் பகுதியில் நிகழ்ந்துள்ளது. 56 வினாடிகள் ஓடும் வீடியோவில், பள்ளியில் இருந்து வெளியே வரும் மாணவர்கள் வீட்டிற்கும் செல்லும் உற்சாகத்தில் சாலையில் ஓடுகின்றனர்.
அப்போது 7 வயதுடைய ஒரு சிறுவன் இருபக்கமும் கவனிக்காமல் சாலையை கடந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்படுகிறார்.
இதையடுத்து சுயநினைவை இழந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு படுகாயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வீடியோவை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
VIDEO | Karnataka: A 7-year-old boy sustained serious injuries as he was hit by a speeding motorcycle while crossing a road in Baliyoor, Manjeshwar area bordering #Mangaluru. The incident was caught on CCTV.#KarnatakaNews
(Source: Third Party)
(Full video available on PTI… pic.twitter.com/it9uw8AQ90
— Press Trust of India (@PTI_News) November 28, 2024