எம்.ஆர்.ராதாவை எட்டி உதைத்த எம்.என்.ராஜம் கீழே விழுந்துவிட, உதை வாங்கிய எம்.ஆர்.ராதா அப்படியே நின்றுள்ளார்.

முற்போக்கு சிந்தனையுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் எம்.ஆர்.ராதா, ஒரு நடிகை தன்னை எட்டி உதைக்கும் காட்சியில் நடிக்கும்போது, அந்த நடிகைக்கு தைரியம் சொல்லி உதைக்குமாறு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில், முற்போக்கு சிந்தனைகளுடன் படங்களை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் எம்.ஆர்.ராதா. நாடக நடிகராக இருந்து சினிமாவில், காமெடி, குணச்சித்திரம், ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றிருந்த இவர், பல நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தபோதும் நாடகங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த எம்.ஆர்.ராதா ஒருமுறை ராமாயனத்தை கிண்டல் செய்து ஒரு நாடகத்தை நடத்தியிருந்தார்.

இந்த நாடகத்தை பார்த்த பலரும், இது தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறிய நிலையில், அடுத்த நாள், இந்த நாடகத்தை பார்க்க வருகிறவர்கள் வராலம். ஆனால் தங்கள் மனம் புண்பட்டுள்ளதாக உணரும் எவரும் இந்த நாடகத்தை பார்க்க வர வேண்டாம். என்று போஸ்டர் ஒட்டியுள்ளார்.

அந்த அளவிற்கு முற்போக்கு சிந்தனையுடன் இருந்த எம்.ஆர்.ராதா, ஒரு சில படங்களில், ஹீரோவாகவும் நடித்துள்ள எம்.ஆர்.ராதாவுக்கு பெரிய வெற்றியை கொடுத்த படம் தான் ரத்த கண்ணீர்.

இன்றைக்கும் பேசப்படும் ஒரு படமாக காலம் கடந்து நிலைத்திருக்கும் இந்த படத்தில் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமான எம்.ஆர்.ராதா நடித்திருந்தார். இதில் ஒரு கட்டத்தில் குஷ்ட நோயாளியாக மாறும் எம்.ஆர்.ராதா, தான் பழங்கிய ஒரு நடிகையிடம் சாப்பாடு கேட்க போவார்.

அப்போது அந்த நடிகை இவரை பார்த்து அறுவறுப்பாக இருக்கிறது என்னை தொடாதே என்று எட்டி உதைக்க வேண்டும்.

அந்த நடிகை காந்தா கேரக்டரில் நடித்தவர் நடிகை எம்.என்.ராஜம். இந்த காட்சியில் நடிக்கும்போது மாடிப்படியில் எம்.என்.ராஜம் மேலே இருக்கும்போது அவருக்கு கீழே எம்.ஆர்,ராதா நிற்பார்.

அவரை எப்படி எட்டி உதைப்பது என்று தயங்கிய எம்.என்.ராஜத்துக்கு, எம்.ஆர்.ராதா தைரியம் சொல்லி நடிக்க வைத்துள்ளார். காட்சி படமாக்கப்பட்டபோது, எம்.என்.ராஜம் அவரை எட்டி உதைத்துள்ளார்.

எதிர்பாராத விதமாக எட்டி உதைத்த எம்.என்.ராஜம் கீழே விழுந்துவிட, உதை வாங்கிய எம்.ஆர்.ராதா அப்படியே நின்றுள்ளார்.

அதன்பிறகு எம்.ஆர்.ராதா மீண்டும் அவருக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து பய்மா இருக்குனு சொல்லிட்டு உதைத்துக்கொண்டே இருக்காத ஒரு ஷாட்டில் முடி என்று சொல்லி அந்த காட்சியை படமாக்கியுள்ளனர்.

காட்சி முடிந்தவுடன், தெரியாமல் செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று எம்.ஆர்,ராதாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் எம்.என்.ராஜம்.

உதைச்சிட்டேன் 🥰 #SunLife | #Natchatthriasangamam |
Posted by Sun Life on Tuesday, December 3, 2024

இதை கேட்ட எம்.ஆர்.ராதா தெரியாமல் யாரும் எதையும் செய்துவிட முடியாது. நீ ரொம்ப நல்ல நடிக்க நல்ல வருவ என்று கூறியுள்ளார். அந்த காட்சியில் நடித்தது தான் எனக்கு பெரிய ஹைலைட்டாக அமைந்தது என்று எம்.என்.ராஜம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply