1948க்கு முன்பு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலகில் இருக்கவே இல்லை. பலஸ்தீனமே ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அன்றைய துருக்கிப் பேரரசின் கீழ் இருந்த நாடாகும். முதலாம் உலகப் போரின் போது துருக்கி தோற்கடிக்கப்பட்டு மத்திய கிழக்கு பிரிட்டிஷ்-பிரெஞ்சு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

1916 மே மாதம் கையெழுத்திடப்பட்ட இரகசிய சைக்ஸ் – பிகொட் ஒப்பந்தத்தின் கீழ் பிரிட்டனும் பிரான்ஸும் அரபு உலகத்தை தத்தமது ஆதிக்கத்தின் கீழ் பல துண்டுகளாகப் பிரித்து மேற்கத்திய நாடுகளுக்கு சேவை செய்யும் பொம்மை ஆட்சிகளை நிறுவின. அமெரிக்க-ஐரோப்பா இஸ்ரேலிய நலன்களுக்கு சேவை செய்யும் இந்த கைக்கூலி பொம்மை ஆட்சிகள் தான் இன்று வரை தொடருகின்றன.

1920 ஜூலை முதலாம் திகதி பல்போர் பிரகடனத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த மோசமான பிரிட்டிஷ் சியோனிசவாதியான சேர்ஹெர்பர்ட் சாமுவேல் பலஸ்தீனத்துக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் பிரிட்டனுக்கு இருந்த ஆதிக்க அதிகாரம் யூதர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரவும், பிரிட்டிஷ் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் அவர்களுக்கு போர் திறன்களில் பயிற்சி அளிக்கவும் யூத முகவராண்மைகளுக்கு அனுமதி அளித்தது.

அதேநேரத்தில் அரபு வீடுகள் மற்றும் பள்ளிவாசல்களிலும் கூட பிரிட்டிஷ் அதிகாரிகளால் ஆயுதங்கள் தேடப்பட்டன. ஆங்கிலேயர்கள் சியோனிஸ்டுகளுக்கு அதிநவீன ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கினர். மேலும் பேனா, கத்தி வைத்திருந்த அரேபியர்களை கூட கைது செய்து தண்டித்தனர்.

பலஸ்தீனத்தில் பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்திய மெனாச்சம் பெகின் மற்றும் இட்ஷாக் ஷமீர் ஆகியோரின் தலைமையின் கீழ் ஹாகானா ஸ்டெர்ன் கேங் மற்றும் இர்குன் போன்ற யூத பயங்கரவாத படைப்பிரிவுகளை நிறுவுவதற்கு பிரிட்டிஷ் ஆதரவளித்தது.

1946 ஜூலை 22இல் மெனாச்செம் பெகின் தலைமையிலான பயங்கரவாதிகள் ஜெருசலேமில் உள்ள கிங் டேவிட் ஹோட்டலில் குண்டு வீசி 91பேரை கொன்றனர். அதில் 25 பேர் பிரிட்டன் பிரஜைகள் 41 அரேபியர்கள் மற்றும் 17 பேர் யூதர்கள் உள்ளடங்குகின்றனர் . மெனாச்செம் பெகின் புறம்பாக ஒரு படுகொலை படலத்தில் ஈடுபட்டார்.

டெய்ர் யாசின் படுகொலை மனிதகுலத்திற்கு எதிரான மிகவும் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களில் ஒன்றாகும். மேலும் “வியட்நாமின் மை லாய் படுகொலை” உடன் இதை ஒப்பிடலாம்.

775 பேர் மட்டுமே வாழ்ந்த சிறிய அரபு கிராமம் ஒன்றின் மீது மெனாச்செம் பெகின் குழுவினர் ஏழு குண்டுகளை வீசிய பிறகு, அங்கு வாழ்ந்த தொண்ணூறு வயதான ஹஜ் இஸ்மாயில் அட்டிச் மற்றும் பதினெட்டு மாத முகமது உட்பட எல்லா வயது பிரிவுளையும் சேர்ந்த நிராயுதபாணிகளான 254 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என எல்லோரையும் சுட்டுக் கொன்றனர்.

ஆயுதங்கள் எதுவுமற்ற மற்றும் ஒழுங்மைக்கப்படாத அரேபியர்கள் பீதியுடன் கூச்சலிட்டவாறே வெளியேறத் தொடங்கினர்.

1948 மே 15இல் பலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை பலஸ்தீனத்தின் பிரிவினை குறித்து வாக்களிப்பதற்கு முன்னதாக மெனாச்செம் பெகின் மற்றும் பென் குரியன் ஆகியோர் முடிந்தவரை பல அரேபியர்களை வெளியேற்றிஇ முடிந்தவரை அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அடாவடித்தனம் புரிந்தனர்.

இந்த படுகொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் அர்னால்ட் டாய்ன்பீ தனது ‘எ ஸ்டடி ஒப் ஹிஸ்டரி’ என்ற புத்தகத்தில் “பலஸ்தீன அரேபியர்களுக்கு எதிராக சியோனிச யூதர்கள் செய்த தீய செயல்கள் நாசிக்கள் யூதர்களுக்கு எதிராக செய்த குற்றங்களுடன் ஒப்பிடத்தக்கவை. டெய்ர் யாசினின் இரத்தம் இர்குனின் தலையில் இருந்தது. 1948 மே 15இக்குப் பிறகு பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டது முதல் அனைத்து இஸ்ரேலியர்களின் தலையிலும் அது உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேஇரத்த வெறியோடு இர்குன், ஸ்டெர்ன் மற்றும் ஹாகனா என்பன ஏனைய பல கிராமங்களிலும் மக்களை கொன்று தீர்த்தன. 1948 ஏப்ரல் 14இல் நசிருதீன் கிராமமும் இந்த படுகொலை படலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அங்கு தப்பிக்க முடிந்த நாற்பது பேரைத் தவிர மற்ற அனைவரும் இர்குன் – ஸ்டெர்ன் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

அடுத்ததாக 1948 மே 5 அன்று ஹகானா பயங்கரவாதிகள் திபேரியா பகுதியை எதிர்நோக்கி இருந்த மஸ்ராத் அல் கௌரி பகுதியில் எஞ்சியிருந்த எல்லோரையும் மொத்தமாக படுகொலை செய்தனர். கொல்லப்பட்ட பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் சிதைக்கப்பட்டன.

மேலும் பல முதியவர்கள் தலை துண்டிக்கப்பட்டு அவர்களின் கைகால்களும் துண்டிக்கப்பட்டன. ஹகானா அவர்களை ஒரு வீட்டிற்குள் பூட்டி தீ வைத்தபோது இளைஞர்கள் உயிருடன் வறுத்தெடுக்கப்பட்டனர்.

உயிர் பிழைத்த சில முதியவர்கள் இறுதியாக விடுவிக்கப்பட்டு தங்கள் கதையை அரபு உலகிற்குச் சொல்லுமாறு கூறி விடப்பட்டனர். மேலும் அரபு நாடுகளை தங்கள் மீட்புக்கு வருமாறு அழையுங்களென அவர்கள் கிண்டலடிக்கப்பட்டனர்.

1948 மே 6ஆம் திகதி சபாத் பிரதேசத்தின் அல் சைதூன் என்ற இடத்தில் பள்ளிவாசல் ஒன்றுக்குள் கிராமவாசிகள் பலரை உள்ளேவைத்து பூட்டி அந்த பள்ளிவாசல் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்டது. டெய்ர் யாசின் பகுதியில் நடத்தப்பட்டது போன்ற சியோனிஸ்டுகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் காசாவில் உள்ள பேத் தராஸ் என்ற இடத்திலும் முழு மக்கள் தொகையும்ம் 1948 மே 13 அன்று அழிக்கப்பட்டனர்.

33rd President of the United States Harry S. Truman

போதுமான யூதர்கள் அழைத்து வரப்பட்ட பின் இஸ்ரேலிய பிரச்சினையை பிரிட்டன் அமெரிக்காவிடம் ஒப்படைத்த்து. அதன் பிறகு ஜனாதிபதி ஹரி பலஸ்தீனத்தை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரண்டாகப் பிரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா.வை மிரட்டி கட்டாயப்படுத்தினார்.

பலஸ்தீனர்களை வெளியேற்றி யூத குடியேற்ற வாசிகளுக்கான ஒரு அரசை உருவாக்குவது சட்டவிரோதமானது என்று கூறி ஆறு நாடுகள் இந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தன. அவர்கள் அனைவரும் இலஞ்சம் கொடுத்து பிரிவினை தீர்மானத்திற்கு வாக்களிக்குமாறு மிரட்டப்பட்டனர்.

கிட்டத்தட்ட அமெரிக்காவின் முழு நிர்வாகமும் இஸ்ரேல் உருவாக்கப்படுவதையும் மற்றும் பலஸ்தீனர்கள் தங்கள் சொந்த பூமியிலிருந்து வெளியேற்றப்படுவதையும் எதிர்த்தது. ஆனால் ஜனாதிபதி ஹரி ட்ரூமன் இந்த நடவடிக்கையை ஆதரிக்குமாறு அவர்களை கட்டாயப்படுத்தினார்.

PRIME MINISTER DAVID BEN GURION

இதனால் பல உயர் அதிகாரிகள் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். இவற்றின் நடுவே உலக சியோனிச அமைப்பின் நிர்வாகத் தலைவரான டேவிட் பென்-குரியன் பிரிட்டிஷ் ஆணை காலாவதியாவதற்கு ஒரு நாள் முன்பாக 1948 மே 15 அன்று இஸ்ரேலின் சுதந்திரத்தை அறிவித்தார். சில நிமிடங்களில் அமெரிக்காவிலிருந்து அதற்கு அங்கீகாரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இன்றைய ரஷ்யாவான அன்றைய சோவியத் யூனியனும் அங்கீகாரம் வழங்கியது.

யூதர்களுக்கென ஒரு அரசை நிறுவிய பிறகும் இஸ்ரேலின் அட்டூழியக் கொள்கைகள் நிறுத்தப்படவில்லை. காசாவில் பலஸ்தீனர்களை இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலை செய்தது. காஸாவை இஸ்ரேலுடன் இணைத்து அகண்ட இஸ்ரேலை உருவாக்க பலஸ்தீனர்களை இனரீதியாக ஒழித்துக் கட்டுவதற்கான அண்மைக்கால இனப்படுகொலை தான் இப்போது அரங்கேறி வருகிறது.

பலஸ்தீனர்களைக் கொல்லும் இந்த பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் வெளிப்படையான ஆதரவுடன் ஹமாஸின் 2023 ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு பதிலளிக்கும் போர்வையில் இஸ்ரேல் காசாவில் பலஸ்தீன பொதுமக்கள் மீதான மற்றொரு இனப்படுகொலை படலத்தை தொடங்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் முதல் விரைவில் பதவியை விட்டு வெளியேறும் ஜனாதிபதி ஜோ பைடன் வரை முழு மத்திய கிழக்கையும் சீர்குலைக்கும் நோக்கில் அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கான அவர்களின் வடிவமைப்பின் ஒரு பகுதியாக இஸ்ரேலின் அனைத்து குற்றங்களுக்கும் முழுமையாள ஆதரவை வழங்கி வந்துள்ளனர். அவர்கள் தங்கள் இருப்புக்காக அமெரிக்காவை முழுமையாக நம்பியும் அதில் தங்கியும் இருக்கும் அரபுலக சர்வாதிகாரிகளோடு கைகோர்த்து உள்ளனர்.

-லத்தீப் பாரூக்-

இஸ்ரேல் பாலத்தீன மோதல்- 10 கேள்விகள்

Share.
Leave A Reply