இஸ்ரேலின் ஹைபா நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
70 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்ட அதேவேளை மற்றுமொரு நபர் கத்திக்குத்தில் ஈடுபட்டுள்ளார்.
நகரின் மத்தியில்உள்ள பேருந்து நிலையம் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.