ஜேர்மனியின் தென்மேற்கு நகரான மான்ஹெய்மில் நபர் ஒருவர் பொதுமக்கள் மீது காரால் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
காரை செலுத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்த நகரில் கடும் ஆபத்து நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் பாரிய நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
கறுப்பு நிற கார்வேகமாக சென்றது என தெரிவித்துள்ள உணவக ஊழியர் ஒருவர் அதன்பின்னர் பல அலறுவதையும் நபர் ஒருவர் நிலத்தில் வீழ்ந்து கிடப்பதையும் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
30 பேர் என்னுடைய கடையில் தஞ்சம் புகுந்தனர் என தெரிவித்துள்ள பூக்கடை உரிமையாளர் ஒருவர் அம்புலன்ஸ்களை காணமுடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.