பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுலு ஓயா, தெல்கஹவல பகுதியில் மணல் நிறைந்த குழி ஒன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை (13) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சடலமானது பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply