சிதைந்த உலோக குப்பைகள் மற்றும் மற்றும் கொங்கிறீட் குப்பைகளின் குவியலுக்கு அடியிலிருந்து அழுகைகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றன.

எனினும் சில நாட்களால் தங்கள் கைகளால் அந்த இடிபாடுகளை தோன்றிய பின்னர் மக்கள் மியன்மாரின் பூகம்பத்தினால் இடிபாடுகளிற்குள் சிக்குண்டவர்களை மீட்பதற்கான நம்பிக்கையை இழந்துள்ளனர்.

அவர்கள் அங்கு உயிருடன் இருக்கின்றார்கள் என தெரிந்தும் அவர்களை மீட்கமுடியாமல் உள்ளதே மிக மோசமான விடயம் என தெரிவித்தார் டய் ஜார் லின், மண்டலாயில் இடிந்து விழுந்த தொடர்மாடியொன்றின் இடிபாடுகளை அகற்றியவாறு அவர் இதனை தெரிவித்தார். தென்கிழக்காசிய நாட்டின் முன்னைய தலைநகரம் .

மீட்பு குழுக்களிடம் இடிபாடுகளை அகற்றுவதற்கான இயந்திரங்கள் எதுவும் இல்லாததால் அந்த இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் என கருதப்படும் 90 பேரையும் மீட்பதற்காக வெறும் மனஉறுதியுடன் மாத்திரம் அவர்கள் செயற்படுகின்றனர் என டய் ஜார் லின் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வெற்றிபெற்றனர்- 29 பேரை காப்பாற்ற முடிந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரமே நீடித்தது – உயிருடன் 29 பேர் மீட்கப்பட்டதை தொடர்ந்து 9 உடல்கள் மீட்கப்பட்டன.

மோதலில் சிக்குண்டுள்ள மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் மேலும் உதவி வழங்கினால், இன்னமும் பலரை காப்பாற்றலாம் என்ற வேதனையை ஏற்படுத்தும் உணர்வு காணப்படுகின்றது.

நாங்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்காக மேலும் தீவிரமாக செயற்பட தயாராக உள்ளோம் ஆனால் பலரின் உயிரை காப்பாற்றுவதற்கான, அறிவோ இயந்திரங்களோ இல்லை எங்களிடம் இல்லை என தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தொண்டராக செயற்படும் டாய் தெரிவித்துள்ளார்.

நாங்கள் களைப்படைந்துவிட்டோம் ஆனால் நாங்கள் தொடர்ந்து தோண்டுவோம் நாங்கள் தோண்டா விட்டால் வேறு யார் அதனை செய்யப்போகின்றார்கள் என அவர் தெரிவித்தார்.

மியன்மாரில் பெரும் அவலத்தை ஏற்படுத்தியபூகம்பம் நிகழ்ந்து பல மணிநேரம் ஆகிவிட்டது.

எனினும் மீட்பு பணிகளிற்கு உதவுவதற்கான பாரிய இயந்திரங்கள் இன்மையால் ,வீடுகள்,அலுவலகங்கள் பாடசாலைகள், இடிந்துவிழுந்த வேளை கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றன.

நான்கு வருட உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் -பல தசாப்த ஊழல் மிகுந்த இராணுவ ஆட்சிக்கு பின்னர்,இவ்வளவு பெரிய இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளும் நிலையில் மியன்மார் காணப்படவில்லை.

பூகம்பத்திற்கு முன்னரே பொருளாதாரமும் சுகாதார சேவையும் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன,3மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர்,மிகப்பெருமளவு மக்கள் மனிதாபிமான உதவிகளையே நம்பியுள்ளனர்.

Share.
Leave A Reply