“இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அருகே விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டன.ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய அவசர சேவையை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.????

இஸ்ரேலிய ஊடக நிறுவனமான ஹயோம் பகிர்ந்துள்ள காணொளியில், ஏவுகணை தரையிறங்கிய இடத்தில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது.

மேலும் பயணிகள் முனையத்திலிருந்து புகை எழுவதை காட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.தாக்குதலை தொடர்ந்து டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன.

கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply