“பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் சமூக ஊடக பங்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த காட்சிகளில் தாக்குதலின் தாக்கம் தெளிவாக பதிவாகி உள்ளது.

 

Share.
Leave A Reply