இலங்கைக்கு ஏப்ரல் மாதத்தில் சுமார் 174,608 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் இறுதி வரை சுமார் 896,884 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தரவு அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2024 ஏப்ரலில் சுமார் 148,867 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 17.3% அதிகரித்துள்ளது.
முந்தைய மாதங்களைப் போலவே, ஏப்ரல் மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடாக இந்தியா தொடர்ந்து உள்ளது. அதன்படி சுமார் 38,744 பார்வையாளர்களைப் பதிவு செய்துள்ளது.
கூடுதலாக, ஐக்கிய இராச்சியம் (17,348), ரஷ்யா (13,525) மற்றும் ஜேர்மனி (11,654) ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.