காலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திரவின் பூதவுடலுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
மறைந்த தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர அவர்களின் பூதவுடலுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பந்துல ஹரிசந்திர உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் பூதவுடல் தற்போது காலி மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்று வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்,
-
மறைந்த ஆளுநரின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தினார்
-
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்
அரசாங்கம், அரசியல் வட்டாரங்கள் மற்றும் பல துறைகளில் இருந்த முக்கியஸ்தர்கள் தொடர்ந்து அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

