பிரதீப் ரங்கநாதன் இயக்கிய Dude திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் பழைய பாடல்களை தேவையான அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதன் பேரில் நீதிமன்றம் உடனடியாக அந்த பாடல்களை படத்திலிருந்து நீக்க உத்தரவிட்டது.
இந்த சர்ச்சை சினிமா துறையிலும் ரசிகர்களிடேயும் பெரும் பேச்சு பொருளாக இருந்தது.
இந்நிலையில், பிரச்சனையை நீண்டுகொள்ளாமல் முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் நேரடியாக இளையராஜாவுடன் பேசி சமரசத்தை மேற்கொண்டுள்ளது. நீதிமன்றத்தில் சமரசப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
சமரச நிபந்தனைகளின் படி:
-
இளையராஜாவுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
-
படத்தில் அவரது பாடலை பயன்படுத்தியதற்காக சிறப்பு நன்றி தெரிவிக்கும் குறிப்பும் சேர்க்கப்பட உள்ளது.
இந்த சர்ச்சை முடிவுக்கு வந்ததால், ரசிகர்கள் மிகவும் தவறவிட்டிருந்த கருத்த மச்சான் பாடல் மீண்டும் Dude படத்தில் இடம்பெற இருக்கிறது.
சினிமா வட்டாரங்களில் இந்த தீர்வு இரு தரப்புக்கும் நன்மையான முடிவாக பார்க்கப்படுகிறது.

